/உள்ளூர் செய்திகள்/சேலம்/துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
ADDED : மார் 27, 2010 04:25 AM
மேட்டூர்: வெள்ளெருக்கு செடிகள் துஷ்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதாகவும், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை முடக்குவதாகவும் நம்புவதால், மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டு முன் வெள்ளெருக்கு செடி வளர்க்கின்றனர்.
எருக்கஞ்செடிகளில் நீல எருக்கன், வெள்ளை எருக்கன், முத்து எருக்கன் என பல்வேறு வகைகள் உள்ளது. இதில், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் எருக்கஞ்செடி வேரில் விநாயகர் சிலை செய்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், வெள்ளை எருக்கனில் லட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வளர்த்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்காமல் தடுக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர். வெள்ளெருக்கு பூக்களில் இருந்து ஆஸ்துமா தடுக்கும் மருந்தும், இலை சாற்றில் இருந்து வாதம், கை, கால் வலியை தடுக்கும் நாட்டு மருந்தும் தயாரிக்கப்படுகிறது.
வெள்ளருக்கு தண்டில் இருந்து நாரை எடுத்து குழந்தைகளுக்கு அரைஞான் கயிறாக கட்டினால் நலுங்கு ஏற்படாது என்பதும் கிராமபுற மக்களின் நம்பிக்கையாகும். அதனால் மேட்டூர், கொளத்தூர் பகுதியில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வெள்ளெருக்கு செடிகளை ஆர்வத்தோடு வளர்க்கின்றனர்.